மதுரை -மதுரை தவிட்டுச்சந்தையில் பழைய கட்டடங்களில் செயல்பட்ட மாநகராட்சி கடைகள் இடிக்கப்பட்ட நிலையில் 140 ஆண்டு பழமையான முனியாண்டி கோயில் இடிக்கப்பட்டதை கண்டித்து பா.ஜ., விஷ்வ ஹிந்து பரிஷத் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.பா.ஜ., நகர் தலைவர் சரவணன், பரிஷத் தலைவர் பாண்டியன், இந்து முன்னணி தலைவர் தங்கம் வெங்கடேஷ், பா.ஜ., நிர்வாகிகள் பாலமுருகன், ஹரிஹரன், ராஜரத்தினம், மோகன்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆக்கிரமிப்பு என்ற பெயரில் ஹிந்து கோயில்களை மாநில அரசு இடிப்பதாகவும் கோஷங்களை எழுப்பினர்.