இந்திய மருத்துவ துறை மற்றும் ஓமியோபதி மருத்துவ பிரிவின் கீழ் மதுரை மாவட்டத்தில் 30 சித்த மருத்துவ பிரிவுகள் செயல்படுகின்றன.
ஆரம்ப சுகாதார மையங்களை ஒட்டி ஆங்காங்கு சித்தமருத்துவ பிரிவுகள் உள்ளன. கள்ளந்திரி, வாடிப்பட்டி, சமயநல்லுார், திருப்பரங்குன்றம், கள்ளிக்குடி, ஒத்தகடை உட்பட அனைத்து பகுதிகளிலும் உள்ள சித்த மருத்துவ பிரிவு வாரத்தில் 6 நாட்கள் செயல்படுகின்றன. மதுரையில் மட்டும் திங்கள், புதன், வெள்ளியில் செயல்படுகிறது.
மற்ற நாட்களில் பூட்டி கிடக்கிறது.கொரோனா பெருந்தொற்று முதல் அலையிலிருந்தே மக்கள் சித்தமருத்துவத்திற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். பக்க விளைவுகள் இல்லாத சித்த மருத்துவத்தை தேடி மக்கள் வரும் நிலையில் கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை அருகில் சித்த மருத்துவ பிரிவு இருந்தும் முழுமையாக பயன்படவில்லை.
மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் மாரியப்பன், ''மருத்துவ பிரிவு ஆறு நாட்கள் செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.மதுரை, ஜன. 22 -மதுரை பழைய கலெக்டர் அலுவலக வளாகத்திலுள்ள சித்த மருத்துவ பிரிவு வாரத்தில் 3 நாட்கள் மட்டுமே செயல்படுவதால் கொரோனா பாதிப்புக்கு மாற்று மருத்துவத்தை விரும்புவர்கள் ஏமாற்றமடைகின்றனர்.