மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு | செய்திகள் | Dinamalar
மருத்துவ படிப்புகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 

புதுச்சேரி : எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான வரைவு தரவரிசை பட்டியலை சென்டாக் வெளியிட்டுள்ளது.புதுச்சேரியில் எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் உள்ளிட்ட நீட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கைக்கான சென்டாக் விண்ணப்பங்கள் கடந்த அக்டோபர் 17 ம் தேதி முதல் www.centacpuducherry.in என்ற இணையதளம் மூலம் பெறப்பட்டது.பிளஸ் 2 முடித்த மாணவ, மாணவிகள் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்தனர்.



வழக்கமாக, செப்டம்பர் மாதத்திற்குள் மருத்துவ படிப்புகளுக்கான சென்டாக் கவுன்சிலிங் முடிந்துவிடும். ஆனால் வருவாய் துறை அதிகாரிகள் சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்தும் கவுன்சிலிங் நடக்கவில்லை.இதர பிற்படுத்தப்பட்டோருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு சம்பந்தமாக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு இருந்ததால், மருத்துவ படிப்புகளுக்கு சென்டாக் கவுன்சிலிங் நடத்தவில்லை.

தற்போது இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீத இட ஒதுக்கீடு செல்லும் என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. இதை தொடர்ந்து, மெரிட் லிஸ்ட் தயார் செய்யும் பணிகளை கடந்த ஒருவாரமாக சென்டாக் விரைவுபடுத்தியது.நேற்று அனைத்து பணிகளும் முடிந்து எம்.பி.பி.எஸ்., பல் மருத்துவம், ஆயுர்வேதம் கால்நடை மருத்துவம் உள்ளிட்ட படிப்புகளுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் வரைவு தரவரிசை பட்டியலை www.centacpuducherry.in என்ற இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.இந்த நீட் மதிப்பெண் அடிப்படையிலான தரவரிசை பட்டியலில் ஆட்சேபனை இருந்தால் மாணவர்கள், தங்களுடைய லாகின் மூலம் வரும் 24ம் தேதி மாலை 6 மணிக்குள் தெரிவிக்கலாம்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X