அவலுார்பேட்டை : வளத்தியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் நடந்தது.கால்நடை பராமரிப்புத் துறை சார்பில் நடந்த முகாமிற்கு, ஒன்றிய சேர்மன் கண்மணி நெடுஞ்செழியன் தலைமை தாங்கி முகாமை துவக்கி வைத்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் முன்னிலை வகித்தார். ஊராட்சித் தலைவர் விஜயலட்சுமி ஜெயக்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் கோவிந்தராஜன் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.டாக்டர் நிர்மலன் மற்றும் குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசி மற்றும் சிகிச்சை அளித்தனர். மேலும், பொதுமக்களிடம் கோமாரி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.