செஞ்சி : அவியூர் - வீரணாமூர் இடையே தொண்டி ஆற்றில் 5.54 கோடி ரூபாய் மதிப்பில் புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது.வல்லம் அடுத்த அவியூரில் இருந்து வீரணாமூர் செல்லும் சாலையின் இடையே தொண்டி ஆறு தரைப்பாலம் உள்ளது.
மழைக்காலத்தில் வெள்ளம் ஏற்படும்போது தரைப்பாலம் மூழ்கி, வீரணாமூர், மேல்அத்திப்பாக்கம், ஏதாநெமிலி, பள்ளிகுளம், வெள்ளிமேடுபேட்டை, போந்தை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல கி.மீ., தூரம் சுற்றிச் செல்லும் நிலை உள்ளது.கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மேம்பாலம் கட்ட நபார்டு வங்கி நிதியுதவியுடன் கிராம சாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் 5.54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து புதிய மேம்பாலம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது.சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் தலைமை தாங்கி அடிக்கல் நாட்டினார். மயிலம் தொகுதி எம்.எல்.ஏ., சிவக்குமார் முன்னிலை வகித்தார்.ஒன்றிய சேர்மன் அமுதா ரவிக்குமார், தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் அண்ணாதுரை, துரை, மாவட்ட கவுன்சிலர் அன்புச்செழியன், ஒன்றிய பொருளாளர் தமிழரசன் மற்றும் கிராம சாலைகள் அபிவிருத்தி திட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.