விக்கிரவாண்டி : விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 1666 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை புகழேந்தி எம்.எல்.ஏ., வழங்கினார்.விக்கிரவாண்டி ஒன்றியத்தில் ஈச்சங்குப்பம், தும்பூர், முண்டியம்பாக்கம், பனையபுரம், ராதாபுரம் ஆகிய இடங்களில் நடந்த நிகழ்ச்சியில் .
புகழேந்தி எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பிரதமர் வீடுகட்டும் திட்டத்தின் கீழ் 1,666 பயனாளிகளுக்கு வீடு கட்டுவதற்கான பணி ஆணையை வழங்கினார்.மாவட்ட சேர்மன் ஜெயச்சந்திரன், ஒன்றிய சேர்மன் சங்கீத அரசி, பி.டி.ஓ.,க்கள் நாராயணன், குலோத்துங்கன், ஒன்றிய பொறியாளர்கள் இளையராஜா, குணசேகரன், கருணாகரன், மேலாளர் பாலசுப்ரமணியன், ஒன்றிய செயலாளர்கள் ரவி, ரவிதுரை, மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சித் தலைவர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.