திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் ஏ.சி., மெக்கானிக் நண்பர்கள் குழு சார்பில் ரத்ததான முகாம் நடந்தது.சந்தைப்பேட்டை, டேனிஷ் மிஷன் துவக்கப் பள்ளியில் நடந்த முகாமில் டாக்டர் சுரேஷ் வரவேற்றார். சப் இன்ஸ்பெக்டர் சிவச்சந்திரன், தொழிலதிபர் பாபு முகாமை துவக்கி வைத்தனர். உளுந்துார்பேட்டை அரசு மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவ அலுவலர்கள் ரத்ததானம் பெற்றுக் கொண்டனர்.ஏ.சி., மெக்கானிக்குகள் 20க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். நகர்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலர்கள், சுகாதார ஆய்வாளர் சங்கரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஏ.சி., மெக்கானிக் நண்பர்கள் குழுவைச் சேர்ந்த வெற்றிவேல், நுார்அலி, பாலு, ராஜேஷ், நிசார், பரணி நாதன், சம்பத் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.