108 ஆம்புலன்சை பயன்படுத்தியோர் 42,713 பேர்.... 2020ம் ஆண்டைவிட கடந்தாண்டு அதிகம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
05:54

விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் கடந்தாண்டு 42 ஆயிரத்து 713 பேர், 108 ஆம்புலன்சை பயன்படுத்தியுள்ளனர்.தமிழகத்தில் கடந்த 2008ம் ஆண்டு அவசர மருத்துவ உதவி சிகிச்சைக்காக தமிழக அரசு, ஜி.வி.கே.,நிறுவனம் சார்பில் 108 ஆம்புலன்ஸ் வாகன சேவையை துவக்கியது.

விழுப்புரம் மாவட்டத்தில் 32 ஆம்புலன்ஸ்கள் இயக்கப்படுகின்றன.இதில், அதி நவீன ஆம்புலன்ஸ் 5, பச்சிளங் குழந்தைகளுக்கான ஆம்புலன்ஸ் 1, போக்குவரத்து நெரிசல் மிகுந்த இடங்களில் சுலபமாக செல்ல பயன்படும் இருசக்கர வாகனம் 2, மீதமுள்ள 24 வாகனங்கள் வழக்கமான சிகிச்சை வாகனங்களாகும்.கடந்த 2020, 2021ம் ஆண்டுகளில் கொரோனா தொற்று பரவல் காரணமாக நோயாளிகள் தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் செல்ல முடியாமல் அரசு மருத்துவமனைகளுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது.2020ம் ஆண்டு ஊரடங்கில் பொது போக்குவரத்து சேவை முடக்கப்பட்டிருந்ததால் கர்ப்பிணிகள் பலரை பிரசவத்திற்கு முன் கூட்டியே மருத்துவமனைகளில் அனுமதிப்பதில் சிக்கல் ஏற்பட்டது.இதனால் கொரோனா நோயாளிகள் மட்டுமின்றி பிரசவம் உள்ளிட்ட இதர அவசர மருத்துவ சிகிச்சைக்கு நோயாளிகளை அழைத்துச் செல்லவும், சிகிச்சை முடிந்து வீட்டிற்கு அழைத்துச் செல்லவும் 108 ஆம்புலன்ஸ் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன.

கடந்த 2021 ஜனவரி முதல் டிசம்பர் வரை பிரசவ சிகிச்சைக்கு 12 ஆயிரத்து 866 பேர், சாலை விபத்துகளில் காயமடைந்தோர் 8,000 பேர், இருதய நோய் தொடர்பாக 2,384 பேர், தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட 414 பேர், பக்கவாதம் பிரச்னை தொடர்பாக 672 பேர் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.உணவில் விஷம் தொடர்பாக 2,047 பேர், நாய், பாம்பு கடித்தது தொடர்பாக 1,225 பேர், சுவாசக் கோளாறு காரணமாக 1,884 பேர், உடல்நிலை பாதிப்பு உள்ளிட்ட

இதர நோய்கள் தொடர்பாக 13 ஆயிரத்து 893 பேர் உட்பட 42 ஆயிரத்து 713 பேர் ஆம்புலன்களை பயன்படுத்தியுள்ளனர்.மேலும் 56 பிரசவங்கள் ஆம்புலன்சிலேயே நடந்துள்ளது. பிரசவ சிகிச்சைக்காக கர்ப்பிணிகளை அழைத்து வரச் செல்லும் போது, வீடுகளிலேயே 119 குழந்தைகள் பிறந்தன.கடந்த 2020ம் ஆண்டு 39 ஆயிரத்து 183 பேர் ஆம்புலன்சை பயன்படுத்திய, நிலையில் 2021ம் ஆண்டு கூடுதலாக 3,530 பேர் பயன்படுத்தியுள்ளனர். இதை தவிர்த்து, கடந்தாண்டு கொரோனா நோயாளிகள் 3,157 பேர், கடந்த 2020ம் ஆண்டு 8,240 பேர் ஆம்புலன்சை பயன்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X