ஊரக வளர்ச்சிப் பணி: தரமாக இருக்க வேண்டும்; கலெக்டர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
06:00

விழுப்புரம் : கிராமப்புற வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சி பணிகளும் தரமாக மேற்கொள்ள வேண்டும் என ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுக்கு கலெக்டர் மோகன் அறிவுறுத்தினார்.

காணை ஒன்றியத்திற்குட்பட்ட பெரும்பாக்கம், வி.கொத்தமங்கலம் மற்றும் கல்பட்டு ஊராட்சி பகுதிகளில் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப் பணிகளை கலெக்டர் மோகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.அப்போது, அவர் கூறியதாவது:பெரும்பாக்கம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை சார்பில் பிரதமரின் ஆவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுள்ள பயனாளிகளின் பட்டியலின் உண்மை தன்மை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.மேலும், இத்திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் வீடுகளின் பணி முன்னேற்றம் குறித்து கேட்டறிந்தேன். மாநில நிதிக்குழு மானியத்திட்டத்தின் கீழ் ரூ.16.20 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியின் கட்டுமான பணிகள்.வி.கொத்தமங்கலம் ஊராட்சியில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் 10.19 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் அங்கன்வாடி மைய கட்டட பணி. தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் 17 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டு வரும் ஊராட்சி துவக்கப்பள்ளி கட்டுமானப்பணி போன்றவைகளை ஆய்வு செய்து பணிகளை விரைந்து முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சிறுவாக்கூர் முதல் கல்பட்டு வரையிலான சாலையில் ஊரக வளர்ச்சித்துறை மூலம் பிரதமரின் கிராம சாலை மேம்பாட்டுத்திட்டத்தின் கீழ் 16.22 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் தார் சாலை பணிகளின் தரம் குறித்து ஆய்வு செய்து, அரசு நிர்ணயித்துள்ள கன அளவில் மேற்கொள்ள வேண்டும். ஒப்பந்த கால வரையிலான சாலை பராமரிப்பு பணியை ஒப்பந்ததாரர் செய்ய வேண்டும்.கிராமப்புற வளர்ச்சிக்காக மேற்கொள்ளப்படும் அனைத்து வளர்ச்சி பணிகளும் தரமாகவும், சிறப்பாகவும் மேற்கொள்ள வேண்டும் என அதிகாரிகளிடத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு கலெக்டர் மோகன் கூறினார்.மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சங்கர் மற்றும் ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X