விழுப்புரம் : 'ஹாலிடே' பதிவு நாள் அடிப்படையில், சிறப்பு கட்டணம் செலுத்தி விழுப்புரம் மாவட்டத்தில் 7 பத்திரப்பதிவு நடந்ததில் 90 ஆயிரத்து 762 ரூபாய் வருவாய் கிடைத்தது.விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள, 11 சார்பதிவாளர் அலுவலகங்களில், கடந்த 18ம் தேதி தைப்பூசத் திருவிழா நாளில், வளர்பிறை திதியும் சேர்ந்திருந்ததால், ஏராளமானோர் வீடு மனை, நிலம் ஆகியவற்றை சார்பதிவாளர் அலுவலகம் வாயிலாக பதிவு செய்து வாங்கினர்.
அன்று 'ஹாலிடே' சிறப்பு பத்திரப்பதிவு நடைபெற்றது. இந்த பதிவுக்கு, முன்னதாகவே ஆவண எழுத்தர்கள் மற்றும் நிலம் அல்லது வீட்டுமனை மற்றும் வீடு வாங்குபவர்கள், இணையதளம் வாயிலாக முன்பதிவு செய்து டோக்கன் பெற்றிருந்தனர்.அதன்படி குறித்த நேரத்தில் டோக்கன் அடிப்படையில், பத்திரப்பதிவு செய்தனர். விழுப்புரம் இணை பதிவாளர் 2 மற்றும் அரகண்டநல்லுார், திருக்கோவிலுார், விக்கிரவாண்டி உள்ளிட்ட 4 சார்பதிவாளர் அலுவலகங்களில், 7 பத்திரப்பதிவு நடந்தது. இதனால், அரசுக்கு 90 ஆயிரத்து 762 ரூபாய் வருவாய் கிடைத்தது.