நுாறு நாள் வேலை பணியாளர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
06:04

திண்டிவனம் : திண்டிவனம் அருகே ஓவர்சீயரை கண்டித்து, நுாறு நாள் வேலை பணியாளர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.மயிலம் ஒன்றியத்திற்குட்பட்ட அகூர் கிராமத்தில் நுாறு நாள் வேலை திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.

நேற்று 100க்கும் மேற்பட்டோர் பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது மயிலம் பி.டி.ஓ., அலுவலகத்தில் இருந்து ஓவர்சீயர் ஜெய்சங்கர் திடீரென ஆய்வுக்கு வந்தார். அங்கு பணியாற்றிய பெண்கள் மரத்தடியில் அமர்ந்திருந்ததால், பணித்தள பணியாளர்கள் பாலாஜி, நந்தினி ஆகியோரை அழைத்து, இதுபோன்று வேலையின் போது, மரத்தடியில் அமர்ந்தால் சம்பளம் வழங்க முடியாது எனக்கூறி விட்டுச் சென்றார்.இதையறிந்த நுாறு நாள் பணியாளர்கள், ஓவர்சீயரை கண்டித்து,

காலை 11:00 மணியளவில் அகூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.வெள்ளிமேடுபேட்டை போலீசார் மற்றும் ஓவர்சீயர் ஜெய்சங்கர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், இனிமேல் வேலை நேரத்தில் யாரும் ஓய்வெடுக்கக்கூடாது என்று ஓவர்சீயர் எச்சரித்தார். அதனை தொடர்ந்து திட்ட பணியாளர்கள் மறியலை 11:30 மணியளவில் கைவிட்டனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X