திருப்பூர்:திருப்பூர் ஒன்றியம், இடுவாய், சின்னக்காளிபாளையத்தில், கால்நடை பராமரிப்புத்துறையின், சிறப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.திருப்பூர் கால்நடை பராமரிப்புத்துறை உதவி இயக்குனர் பரிமளராஜ்குமார், முகாமை துவக்கி வைத்தார்.ஊராட்சியை சேர்ந்த, விவசாயிகள், தங்களது கால்நடைகளுடன் பங்கேற்று, சிகிச்சை மற்றும் ஆலோசனை பெற்றனர்.முகாமில், 45 மாடுகள், 65 ஆடுகள், 25 நாய்களுக்கு, மங்கலம் கால்நடை டாக்டர் செந்தில், இடுவாய் டாக்டர் கல்பனா, உதவியாளர் ஸ்ரீதர் குழுவினர் சிகிச்சை அளித்தனர். முகாமில் பங்கேற்றவர்களில், சிறந்த கிடாரி கன்றுகளுக்கு பரிசு வழங்கப்பட்டது.