திருப்பூர் மாநகராட்சி, 56வது வார்டுக்கு உட்பட்டது மங்கலம் ரோடு பகுதி. அங்கு, அய்யன் நகர் பிரிவு அருகே, மாநில நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடத்தில், கருங்கற்கள் கொட்டி வைக்கப்பட்டுள்ளன. கட்டுமான பணி நடக்கும் இடத்தின் அருகே, ரோட்டின் ஓரமாக உள்ள காலியிடத்தில், கற்கள் கொட்டப்பட்டுள்ளன. நெடுஞ்சாலை ரோட்டோரமாக, கற்களை கொட்டி வைத்துள்ளதால், வாகனங்கள் சென்றுவர இடையூறு ஏற்படுவதாக, பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில்,'காலியிடத்தை யாரும் பயன்படுத்த கூடாது என்பது போல், பரவலாக கற்களை கொட்டியுள்ளனர். பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள கற்களை அகற்ற வேண்டும்,' என்றனர்.