திருப்பூர்:அரசு மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கான முதுகலை ஆசிரியர்களின் முன்னுரிமை பட்டியலை பள்ளி கல்வி ஆணையர் வெளியிட்டுள்ளார்.மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். கொரோனாவால், கடந்த இரு ஆண்டுகளாக நடக்கவில்லை. இந்தாண்டு அரசு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு ஜன., 2022ன் படி பதவி உயர்வு பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதற்கான முன்னுரிமை பட்டியலை பள்ளி கல்வி ஆணையர் நந்தகுமார் வெளியிட்டார்.தமிழகத்தில், 608 முதுகலை ஆசிரியர்கள் இதில் இடம்பெற்றுள்ளனர். திருப்பூர் மாவட்டத்தில் தாராபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி பிரேமா, உடுமலை பெண்கள் மேல்நிலைப்பள்ளி சிவக்குமார், வெள்ளக்கோவில் குணசேகரன், அய்யன்காளிபாளையம் கருப்பையன், பூலாங்கிணர் ஜெகந்நாத ஆழ்வார் சாமி, முத்துார் வேல்முருகன்.மடத்துக்குளம் பத்ரிநாராயணன், உடுமலை கார்த்திகேயன், முத்துார் நல்லசிவம், உடுமலை அலாவுதீன், ஊத்துக்குளி தாமோதரன், உடுமலை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஈஸ்வரன், சாமிகவுண்டன்பாளையம் சிவக்குமார், தாராபுரம் சங்கீதா, ஊத்துக்குளி ஆண்கள் பள்ளி ஜான்சி விஜயகுமாரி, சேவூர் வசந்தாமணி.இடுவம்பாளையம் வனிதா சுகந்தினி, உடுமலை செந்தில்குமார், காங்கயம் சிவசண்முகம் ஆகிய, 19 பேரின் பெயர் முன்னுரிமை பட்டியலில் இடம்பிடித்துள்ளது.