திருப்பூர்:திருப்பூர் மாநகராட்சி, நஞ்சப்பா பள்ளி கொரோனா சிகிச்சை மையத்தில் நேற்று முதல் நபர் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், திருப்பூர் மாநகராட்சி சார்பில், கொரோனா கேர் சென்டர் முதல் கட்டமாக 3 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளது.திருப்பூர் சேவா சமிதி, சிக்கண்ணா கல்லுாரி மற்றும் நஞ்சப்பா பள்ளி வளாகம் ஆகியவற்றில் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் நேற்று முதன் முதலாக திருப்பூரைச் சேர்ந்த 40 வயதுடைய ஒரு ஆண், கொரோனா ெதாற்று உறுதியானதையடுத்து தனிமைப்படுத்தப்பட்ட சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.திருப்பூர் மாநகராட்சி பகுதியில், நடப்பு மாதம் துவக்கம் முதல் நேற்று வரை 2,864 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டது. இதில், 1,003 பேர் குணமடைந்துள்ளனர்.மீதமுள்ள தொற்று பாதித்தோரில் 302 பேர் அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனையிலும், 39 பேர் தனியார் மருத்துவமனையிலும், ஒருவர் நஞ்சப்பா பள்ளி கேர் சென்டரிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,519 பேர் தற்போது வரை வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளனர்.