திருப்பூர்:திருப்பூர் தென்னம்பாளையத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார், 21. இவர் பல்லடம் ரோடு டி.கே.டி., மில் பகுதியில் உள்ள கார் ஷோரூமில் காசாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் வசூலான 3 லட்சத்து, 39 ஆயிரத்து, 137 ரூபாயை டேபிள் டிராயர் வைத்து பூட்டி விட்டு சென்றார். நேற்று காலை திரும்பிய போது, பணம் வைத்திருந்த டிராயர் உடைக்கப்பட்டு, பணம் திருடு போனது தெரிந்தது. வீரபாண்டி போலீசார் விசாரிக்கின்றனர்.