சின்னசேலம் : பெரியசிறுவத்துார் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுற்றுச்சுவர் இல்லாததால், இரவு நேரங்களில் மது அருந்தும் இடமாக மாறி வருகிறது.சின்னசேலம் அடுத்த பெரியசிறுவத்துார் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேலுார், எரவார், அம்மகளத்துார், ஈசாந்தை, பெத்தானுார் ஆகிய சுற்று வட்டார கிராமங்களைச் சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர்.
இப்பள்ளியில் தெற்கு பகுதியில் சுற்றுச்சுவர் வசதி இல்லதததால் திறந்த வெளியாக உள்ளது.இதனால், ஒரு சிலர் பள்ளி வளாகதிற்குள் கால்நடைகளை கட்டுகின்றனர். மேலும், பள்ளி முடிந்து, இரவு மற்றும் விடுமுறை நாட்களில் பள்ளி வளாகத்தை திறந்த வெளி பாராக குடி பிரியர்கள் பயன்படுத்தி வருகின்றனர். மது அருந்திவிட்டு பாட்டில்களை அங்கேயே போட்டுச் செல்கின்றனர். இதனால், மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதனைத் தவிர்க்க பள்ளியின் வளாகத்தில் சுற்றுச் சுவர் அமைக்க மாவட்ட கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.