கோவை:குடோனில் பதுங்கியிருக்கும் சிறுத்தையை ஐந்தாம் நாளாக, வனத்துறையினர் தொடர்ந்துகண்காணித்து வருகின்றனர்.கோவை குனியமுத்துார் பகுதி குடோனில் கடந்த, 17ம் தேதி சிறுத்தை பதுங்கியது. இதையடுத்து சிறுத்தையை பிடிக்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.சிறுத்தையின் நடமாட்டத்தை கண்காணிக்க, குடோனில் ஆறு கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டன. குடோனின் இரண்டு வாயில்களிலும் கூண்டுகள் வைத்து, அதில் இறைச்சி மற்றும் நாய்களை கட்டி வைத்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.ஆனால், சிறுத்தை தொடர்ந்து வனத்துறையினருக்கு போக்கு காட்டி வருகிறது. ஐந்தாவது நாளாக நேற்றும் கண்காணிப்பு பணி தொடர்ந்தது. நேற்று அதிகாலை, மூன்று முறை கூண்டின் அருகில் வந்த சிறுத்தை, கேமராவை உற்றுப்பார்த்து விட்டு திரும்பி சென்றது. வனத்துறையினர் தொடர்ந்து சிறுத்தையை கண்காணித்து வருகின்றனர்.