கோவை:கோவையில் உள்ள எஸ்.எஸ்.டி.,குளோபல் நிறுவனம் மற்றும் ரத்தினம் குழும நிறுவனங்கள் இடையே, புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வாயிலாக, ஜப்பானிய மொழி கற்றுக்கொள்ளும் மாணவர்களுக்கு 80 மணி நேர பயிற்சியும், பின் தேர்ச்சி பெறுபவர்களுக்கு, சான்றிதழும் வழங்கப்படுகிறது. ஜப்பானிய மொழியை ஆண்டுதோறும், 24 ஆயிரம் மாணவர்கள் விரும்பி பயின்று வருகின்றனர். இங்குள்ள மாணவர்கள் ஜப்பானிலும், ஜப்பான் மாணவர்கள் இங்கும் கல்வி பயின்று, மொழி மற்றும் கலாசாரத்தினை கற்றுக்கொள்ள வழிவகை செய்கிறது. மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் ஜப்பான் பேராசிரியர்களுடன் இணைந்து, ஆராய்ச்சி தொடர்பான செயல்பாடுகள் மேற்கொள்ளவும் வழிவகுக்கிறது.புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் போது, கல்லுாரி முதல்வர் முரளிதரன், ஆராய்ச்சி துறை புல முதன்மையர் ஹேமலதா, எஸ்.எஸ்.டி.,குளோபல் மேலாளர் பிரனீத் பாலசுப்ரமணியம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.