கூடலுார்:கூடலுார் இரும்புபாலம் அருகே, பாண்டியர்- வனப்பகுதியில், நாய் ஒன்று குரைத்து கொண்டிருந்தது.தொழிலாளர்கள் சென்று பார்த்த போது, வன விலங்குக்கு வைத்த சுருக்கு கம்பியில், தெரு நாய் சிக்கி உயிருக்கு போராடி வந்தது; வனத்துறைக்கு தகவல் அளித்தனர். வனகாப்பாளர் பிரகாஷ், வேட்டை தடுப்பு காவலர்கள் அப்பகுதிக்கு வந்து நாயின் கழுத்தில் இருந்த சுருக்கு கம்பியை அகற்றினர். சுருக்கு கம்பி வைத்தவர்களை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.