திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் நகராட்சி ஓட்டுச்சாவடி மையங்களை கமிஷனர் நேரில் ஆய்வு செய்தார்.நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை சம்மந்தப்பட்ட உள்ளாட்சி நிர்வாகங்கள் மேற்கொண்டு வருகின்றன. திருக்கோவிலுார் நகராட்சியில் மொத்தம் உள்ள 27 வார்டுகளுக்கு 35 ஓட்டுச்சாவடி மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.இந்த மையங்களில் தேர்தல் ஆணையம் அறிவுறுத்தியுள்ள வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பது குறித்து நேற்று நகராட்சி கமிஷனர் கீதா மற்றும் நகராட்சி ஊழியர்கள் நேரில் சென்று ஆய்வு நடத்தினர்.குறைபாடுகள் இருந்த ஓட்டுச்சாவடி மையங்களில் அதனை உடனடியாக நிவர்த்தி செய்ய அலுவலர்களுக்கு உத்தரவிட்டனர்.