குன்னுார்:குன்னுார்- புதுக்காடு அருகே சில மாதங்களுக்கு பிறகு குட்டியுடன் மீண்டும் யானைகள் முகாமிட்டுள்ளன.குன்னுார்- மேட்டுப்பாளையம் சாலையோர வனப்பகுதிகளில் அடிக்கடி யானைகள் நடமாட்டம் உள்ளது. தற்போது, சாலை விரிவாக்க பணிகள் நடந்து வரும் நிலையில், யானைகள் நடமாட்டம் கடந்த சில மாதங்களாக இல்லாமல் இருந்தது.இந்நிலையில், நேற்று புதுக்காடு பழங்குடியினர் கிராமம் அருகே குட்டியுடன் யானைகள் முகாமிட்டுள்ளன. தனியாக சுற்றிதிரிந்த குள்ள யானையும் இந்த யானைகளுடன் உலா வருகிறது. வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.வனத்துறையினர் கூறுகையில்,' இப்பகுதியில் இரவில் யானைகள் நடமாட்டம் அதிகளவில் இருக்கும். வாகனங்களில் வருபவர்கள் மித வேகத்தில் இயக்க வேண்டும். இரு சக்கர வாகனங்களில் செல்பவர்கள், முன்னெச்சரிக்கையுடன் செல்ல வேண்டும்,' என்றனர்.