போக்கு காட்டிய சிறுத்தை சிக்கியது
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
06:59

கோவை:கோவையில் பாழடைந்த குடோனில் பதுங்கி ஐந்து நாட்களாக போக்கு காட்டி வந்த சிறுத்தை நேற்று நள்ளிரவு கூண்டில் சிக்கியது.கோவை, குனியமுத்தூர், சுகுணாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரு மாதங்களாக பொதுமக்களை அச்சுறுத்தி வந்த மூன்று வயதுடைய ஆண் சிறுத்தை, கடந்த திங்கட்கிழமை சுகுணாபுரம், வாளையாறு ரோட்டிலுள்ள பாழடைந்த குடோனில் பதுங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து அந்த குடோனை வலை கொண்டு மூடிய வனத் துறையினர், இரண்டு நுழைவாயில்களிலும் கூண்டுகளுக்குள் இறைச்சி வைத்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.மேலும், ஐந்து கேமராக்கள் வாயிலாக, சிறுத்தையின் நடவடிக்கைகளை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வந்தனர். ஆனால் கடந்த, 5 நாட்களாக சிக்காமல் போக்கு காட்டி வந்தது.சிறுத்தையின் நடமாட்டத்தை சி.சி.டிவி., வாயிலாக கண்காணித்த வனத்துறையினர், சிறுத்தை குடோனுக்குள் உலா வருவதும், கேமராவை உற்றுபார்ப்பதும், கூண்டின் அருகே சென்றுவிட்டு திரும்பும் காட்சிகளையும் வெளியிட்டனர். இந்நிலையில், நேற்று தண்ணீர் தேடி குடோனில் அலைந்த சிறுத்தை, நள்ளிரவு, 12:30 மணியளவில் குடானின் முன்பக்க நுழைவாயிலில் வைக்கப்பட்டிருந்த கூண்டில் தானாக வந்து சிக்கியது. கூண்டில் வைக்கப்பட்டிருந்த தண்ணீரை குடித்த சிறுத்தை ஆக்ரோஷமாக காணப்பட்டது. பிடிபட்ட சிறுத்தையின் உடல்நிலை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து பாதுகாப்பாக வனப்பகுதியில் விடுவிப்பதற்காக, நேற்று நள்ளிரவு கூண்டுடன் வனத்துறையினர் வாகனத்தில் எடுத்து சென்றனர். இதனால் வனத்துறையினர், அப்பகுதி மக்கள் நிம்மதி பெருமூச்சுவிட்டனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X