பாதுகாத்த வன உயிரினப் பொருட்கள் ;தீயிட்டு அழித்த வனத்துறையினர்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
07:05

கோவை:இயற்கையாக மற்றும் நோயால் உயிரிழந்த வனவிலங்குகளின் உடலில் இருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் தீயிட்டு அழிக்கப்பட்டன.கோவை வனக்கோட்டத்தில் கோவை, பெரியநாயக்கன்பாளையம், காரமடை, மேட்டுப்பாளையம், சிறுமுகை, போளுவாம்பட்டி, மதுக்கரை ஆகிய ஏழு வனச்சரகங்கள் உள்ளன. இவற்றில், யானை, புலி, சிறுத்தை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இயற்கையாக இறந்த, வனவிலங்குகளின் உடல் பாகங்களை வனத்துறையினர் பத்திரப்படுத்தி, முதன்மை வனப்பாதுகாவலர் உத்தரவின்படி, அவற்றை எரித்து அழிப்பர்.கோவை வனக்கோட்டத்தில், 2016 - 2021 வரையிலான ஐந்து ஆண்டுகளில், யானை கோரை பற்கள் - 33, தாடை - 8, சிறுத்தையின் நகங்கள் - 13,பற்கள் - 2, எலும்புகள் - 10, மான் கொம்புகள் - 207, மான் தோல் ஒன்று என, மொத்தம், 274 பொருட்கள் சேகரிக்கப்பட்டு பாதுகாக்கப்பட்டு வந்தன. இவற்றை எரித்து அழிக்க தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் மற்றும் தலைமை வன உயிரின காப்பாளர் அனுமதி அளித்தனர். இதையடுத்து நேற்று கோவை வன அலுவலக வளாகத்தில் வன உயிரினப் பொருட்கள் எரிக்கப்பட்டன.கோவை மண்டல கூடுதல் தலைமை வனப்பாதுகாவலர் ராமசுப்ரமணியன், கோவை மாவட்ட வனஅலுவலர் அசோக்குமார், சூழல் அமைப்பினர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X