திருப்பூர்:பணி நேரத்தில், சரமாரியாக தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, துாய்மை பணியாளர் நேற்று, கலெக்டரிடம் கண்ணீர் மல்க முறையிட்டுள்ளார்.திருப்பூர் மாவட்டம், மங்கலம் ஊராட்சி துாய்மை பணியாளர் அருக்காள், 60; இவர், பெரியபுத்துார் பகுதியில் உள்ள, 200 வீடுகளில், குப்பை சேகரிக்கும் பணியை மேற்கொண்டு வருகிறார். அதே பகுதியில் ஓட்டல் நடத்தி வரும் ஒருவர், அருக்காளை தாக்கி தரக்குறைவாக பேசியுள்ளார்.இந்நிலையில், ஆதரவற்ற தனக்கு, பாதுகாப்பு வேண்டுமென, திருப்பூர் கலெக்டர் வினீத்திடம் நேற்று கண்ணீர்மல்க முறையிட்டார். அருக்காள் கூறுகையில், ''ஓட்டல் நடத்தி வரும் நபருடன் எவ்வித பிரச்னையும் இல்லை. இருப்பினும், என்னை தாக்கி, தரக்குறைவாக பேசினார். பெண்ணுக்கு பாதுகாப்பில்லாத நிலை உள்ளது. அந்த நபர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டரிடம் முறையிட்டுள்ளேன்,'' என்றார்.