உடுமலை:திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் காரத்தொழுவை சேர்ந்த பொன்ராஜ், 24 என்ற நபர், 16 வயது சிறுமியை பலாத்காரம் செய்ததாக போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.உடுமலை மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, அந்நபரை கடந்த ஆண்டு 'போக்சோ' சட்டத்தில் கைது செய்தனர். கர்ப்பமான சிறுமிக்கு, ஏழு மாதங்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்து, அவரது பெற்றோர் பராமரிப்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று அச்சிறுமி வீட்டில் தனது கைக்குழந்தையுடன் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். அருகிலிருந்தவர்கள் இருவரையும் மீட்டு, உடுமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பலத்த காயம் இருந்ததால், கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கணியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.