போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமினில் வந்தவர் தற்கொலை | கடலூர் செய்திகள் | Dinamalar
போக்சோ சட்டத்தில் கைதாகி ஜாமினில் வந்தவர் தற்கொலை
Added : ஜன 22, 2022 | |
Advertisement
 

பெண்ணாடம் : திட்டக்குடி அருகே போக்சோ பிரிவில் கைதாகி நிபந்தனை ஜாமினில் வந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அரியலுார் மாவட்டம், மீன்சுருட்டி அடுத்த நெல்லித்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் பாலகுரு மகன் வசந்தகுமார், 21; இவர் தனது உறவினர் விருத்தாசலம் அடுத்த ராஜேந்திரப்பட்டிணம் சக்திவேல் என்பவருடன், திட்டக்குடி அடுத்த கொடிக்களத்தில் செல்வம் என்பவரது செங்கல் சூளையில் தங்கி 6 மாதங்களுக்கு மேலாக வேலை பார்த்தார்.

கடந்தாண்டு செப்டம்பர் மாதம் 15ம் தேதி கொடிக்களம், புதுகாலனியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை காதலித்து அழைத்து சென்றதாக அவரது தாய் புகார் அளித்தார். புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் போக்சோ பிரிவில் வசந்குமாரை கைது செய்தனர்.கடந்த மாதம் 28ம் தேதி நிபந்தனை ஜாமினில் வந்த வசந்தகுமார், 30ம் தேதியில் இருந்து ஆவினங்குடி போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வந்தார். நேற்று முன்தினம் காலை 10:30 மணியளவில் கையெழுத்து போட்டு விட்டு சேம்பருக்கு சென்றார்.

மாலை 3:00 மணியளவில் நெல்லித்தோப்பு செல்வதாக உறவினர் சக்திவேலிடம் கூறிவிட்டு ஆவினங்குடி வந்தார். ஆனால் ஊருக்கு செல்லாமல் மீண்டும் சேம்பருக்கு திரும்பி இரவு சக்திவேலுடன் தங்கினார்.நேற்று அதிகாலை 3:30 மணியளவில் சக்திவேல் எழுந்து பார்த்த போது வசந்தகுமார் துாக்கில் தொங்கியிருந்தார். அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு, திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர் இறந்து விட்டதாக தெரிவித்தார்.இது குறித்து வசந்தகுமாரின் தாய் சங்கீதா கொடுத்த புகாரின் பேரில் ஆவினங்குடி போலீசார் வழக்குப் பதிந்து கொலையா, தற்கொலையா என விசாரித்து வருகின்றனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X