கடலுார் : கடலுார் அ.தி.மு.க., அலுவலகத்தில் அமைப்பு தேர்தலில் மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, நேற்று நடந்த நேர்காணலின் போது பாதுகாப்புக்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.கடலுார் மேற்கு மாவட்ட அ.தி.மு.க., சார்பில் நகர்புற உள்ளாட்சித் தேர்தலுக்காக விருப்ப மனு பெறப்பட்டது. பாதிரிக்குப்பத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் மாவட்ட செயலாளர் முன்னாள் அமைச்சர் சம்பத் நேற்று நேர்காணல் நடத்தினார். கடந்த மாதம் 20ம் தேதி அமைப்பு தேர்தல் தொடர்பாக, கடலுார் அ.தி.மு.க., அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. அப்போது, இரு தரப்பினரிடையே மோதல் ஏற்பட்டது. கார் கண்ணாடி உடைக்கப்பட்டது. நேற்று நேர்காணல் நடந்ததால் கட்சி அலுவலகத்தில் கட்சியினர் அதிகளவில் திரண்டனர். முன்னெச்சரிக்கையாக திருப்பாதிரிபுலியூர் போலீசார் பாதுகாப்பு பணிக்கு குவிக்கப்பட்டனர்.