பணமாகிறது குப்பை; கூட்டுறவுத் துறையுடன் கைகோர்த்து மலிவு விலையில் பசுமை உரம் விற்பனை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஜன
2022
08:02
பதிவு செய்த நாள்
ஜன 22,2022 07:46


சென்னை: சென்னை மாநகராட்சியில் சேகரமாகும் குப்பையில் இருந்து தயாரிக்கப்படும் உரம், இதுவரை, கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, தமிழக கூட்டுறவு விற்பனை இணையத்துடன் இணைந்து, கிலோ மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகாரட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. இதன் மூலம், சுற்றுவட்டார மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் பலன் அடைவதுடன், உரம் விற்பனையை அதிகரிப்பதன் மூலம், சென்னையை குப்பையில்லா மாநகராட்சியாக மாற்ற முடியும் என, அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.


சென்னை மாநகராட்சியில், மொத்தம் 15 மண்டங்கள் உள்ளன. இதில் 10 மண்டலங்களில் குப்பை கையாளும் பணியில், தனியார் நிறுவனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. ஐந்து மண்டலங்களில், மாநகராட்சி நேரடியாக இந்த பணிகளை மேற்கொண்டு வருகிறது. இப்பணிகளில், 19 ஆயிரத்து, 618 துாய்மை பணியாளர்கள் மற்றும் 6,117 வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

மாநகராட்சியில் தினசரி, 5,200 டன் குப்பை சேகரமாகிறது. இதில், 50 சதவீதம் மக்கும் குப்பையும், 50 சதவீதம் மக்காத குப்பையும் கிடைக்கிறது. மக்கும் குப்பையில் இருந்து, உரம் தயாரிக்க, 208 உரம் தயாரிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில், தினசரி, 450 டன் மக்கும் கழிவுகள் பதனிடப்பட்டு உரமாக்கப்படுகிறது. இவ்வாறு தயாரிக்கப்படும் உரம், ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில், குப்பையில்லா மாநகராட்சியை உருவாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தமிழக கூட்டுறவு துறையின் கீழ் செயல்படும், கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாக ஒரு கிலோ உரம் மூன்று ரூபாய்க்கு விற்பனை செய்ய மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.


இதுகுறித்து, சென்னை மாநகராட்சி தலைமை பொறியாளர் மகேசன் கூறியதாவது:
சென்னையில், தினசரி சேகரிக்கப்படும் குப்பைகளில், 208 உரம் தயாரிக்கும் நிலையங்களில், 450 டன் உரம் தயாரிக்கப்படுகிறது.இதைத் தவிர, மறுசுழற்சி செய்ய முடியாத, எரியூட்டக்கூடிய உலர் கழிவுகள், சிமென்ட் தொழிற்சாலைகளுக்கு வாரந்தோறும், 50 டன் வழங்கப்படுகிறது.

மீதமுள்ள குப்பை, பெருங்குடி, கொடுங்கையூர் குப்பை கிடங்குளில் கொட்டப்படுகின்றன. இதில், பெருங்குடி குப்பை கிடங்கில் பல ஆண்டுகளாக கொட்டப்பட்டுள்ள குப்பை, 'பயோ மைனிங்' முறையில் அகழ்தெடுக்கும் பணிகள் நடந்து வருகின்றன. அதேபோல், கொடுங்கையூர் குப்பை கிடங்கும், 'பயோ மைனிங்' முறையில் அகற்றப்பட உள்ளன.

தினசரி சேகரிக்கப்படும் குப்பை தரம் பிரிக்கப்பட்டு, அந்தந்த மண்டலங்களிலேயே, உரம் தயாரிப்பு மற்றும் மறுசுழற்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அவ்வாறு பயன்படுத்த முடியாத பொருட்களை, எரியூட்டி அழிக்கும் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன.


சென்னை மாநகராட்சியை பொருத்தவரையில், 2,600 டன் குப்பை மக்கும் தன்மை உடையது. இதில், தயாரிக்கப்படும் பசுமை உரத்தை மக்கள் வாங்கி, விவசாய நிலங்கள், வீடுகளில் வளர்க்கும் பூச்செடிகளுக்கு பயன்படத்த துவங்கினால், கிடங்கிற்கு செல்லும் குப்பையின் அளவு பெரும்பகுதி குறையும்.

மேலும், சிமென்ட் ஆலை, மறுசுழற்சி ஆலைக்கு குப்பை அனுப்பப்படுவதால், குறைந்த அளவிலான குப்பையை பயோ மைனிங் முறையில் எரியூட்டி அழிக்கலாம். தற்போது, சென்னை மாநகராட்சியில் சேகரமான மக்கும் குப்பையில் இருந்து தயாரித்த, 160 டன் உரம் கையிருப்பில் உள்ளது. இவற்றை, உரப்பைகளில் அடைத்து விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம். விவசாய நிலங்கள், தோட்டங்களுக்கு பயன்படுத்த மிக குறைந்த அளவில், ஒரு கிலோ மூன்று ரூபாய் அளவில் பசுமை உரம் விற்பனை செய்யப்படுகிறது.

கூட்டுறவு விற்பனை இணையம் வாயிலாகவும், மாநகராட்சியின் மண்டல அலுவலங்கள் வாயிலாகவும் பசுமை உரத்தை மக்கள் வாங்கலாம். வரும் நாட்களில் உரம் விற்பனை அதிகரிக்கும் பட்சத்தில், சென்னையை குப்பை இல்லாத மாநகராட்சியாக மாற்ற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.


மக்கள் ஆதரவு அவசியம்!


மாநகராட்சி சார்பில் தயாரிக்கப்படும் இயற்கை உரம், இதுவரை ஒரு கிலோ 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், தற்போது, அதை மூன்று ரூபாய்க்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூட்டுறவு துறையுடன் இணைந்து விற்பனையை விரிவுபடுத்தவும் திட்டமிட்டுள்ளோம்.

ரசாயன கலப்பின்றி, மக்கும் குப்பைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த உரத்தை, சென்னையை சுற்றியுள்ள, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்ட விவசாயிகள் தயக்கிமின்றி வாங்கி பலன் அடையலாம். மிக மிக குறைந்த விலையில் விற்கப்படுவதால், விரைவில் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கிறோம். விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் ஆதரவு தெரிவித்தால், உற்பத்தியை அதிகப்படுத்தி, 'குப்பையில்லா மாநகாரட்சி' என்பதை சாத்தியப்படுத்த முடியும். - மாநகராட்சி அதிகாரிகள்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
GANESH KUMAR T J - SALEM,இந்தியா
23-ஜன-202218:16:42 IST Report Abuse
GANESH KUMAR T J ஒரு வருடமாக சேலத்தில் இது போன்ற உரத்தை வாங்க முயல்கின்றேன் கிலோ 10 ரூ என்கின்றனர் .சரி ஒரு டன் தரவும் என்றால் மாநகராட்சி வார்டு அலுவலர் கையிருப்பு இல்லை தகவல் தருகிறோம் என்கின்றார். 10 ருபாய் அதிகம் என்றாலும் ஒரு முறை முயற்ச்சித் து பார்க்க கூட கிடைக்க வில்லை. அதை அப்படியே சமைத்து சாபிட்டு விடுவோம் என்று நினைக்கிறாரோ தெரிய வில்லை. குப்பை கிடங்கு சேலத்தில் பல உள்ளன எங்கு கிடைக்கும் என்று தெரிவித்தால் புண்ணியமாய் போகும் .
Rate this:
Cancel
Pats, Kongunadu, Bharat, Hindustan - Coimbatore,இந்தியா
22-ஜன-202213:36:11 IST Report Abuse
Pats, Kongunadu, Bharat, Hindustan படிக்க நல்லாத்தான் இருக்கு. ஆனா அரசு ஊழியர்கள் எதையாவது ஒழுங்காக செய்ததாக சரித்திரமே இல்லை. பொங்கல் கரும்பு, வெல்லம், புளி உட்பட இன்னும் சில மாதங்கள் அல்லது ஆண்டுகளுக்குப் பிறகு இதே தினமலரில் "மாநகராட்சி உரம் தயாரிக்கும் திட்டத்தில் ஊழல்" என்ற செய்தி கண்டிப்பாக வரும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
22-ஜன-202211:27:56 IST Report Abuse
Lion Drsekar பாராட்டுக்கள் உள்ளுக்கு எந்த தீங்கும் விளைவிக்காத அருந்தும் சாராயம், பொங்கலுக்கு பருத்தி விதை, சமையலுக்கு மரத்தூள் என்று இருக்க நிலத்துக்கு தரமாக உரம் என்ற செய்தி பாராட்டுக்குரியது, இன்று அரசு என்றால் வியாபாரம் என்ராவிட்டதால் ஆரம்பத்தில் மலிவு விலையில் விற்கப்படும் பிறகு அதிக விலைக்கு விற்காமல் இருந்தால் நல்லது, தற்போது சாராயம் ஒரு லிட்டருக்கு ரூபாய் 120 அதிக விலைக்கு விற்கிறார்கள், நீதிமன்ற உத்தரவு போட்டும் எங்கும் விலைப்பட்டியல் இல்லை லஞ்ச ஒழிப்பு காவலர்களும் நடவடிக்கை எடுக்கவில்லை, ஊடகங்கள் மற்றும் பாதிரிக்க்கைகளும் அமைதி காக்கின்றன ? அப்படி இல்லாமல் உள்ளது உள்ளபடி செய்தால் உலகம் பாராட்டும் விவசாயமும் பெருகும், மக்களும் நிம்மதியாக வாழலாம், வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X