வடபழநி ஆண்டவர் கோவில் ஆதார பீடங்களில் அஷ்டபந்தன மருந்து சார்த்தல்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஜன
2022
08:24
பதிவு செய்த நாள்
ஜன 22,2022 08:21


சென்னை: வடபழநி ஆண்டவர்கோவில் கும்பாபிஷேத்தை முன்னிட்டு, அஷ்டபந்தன மருந்து இடித்து, சன்னிதிகளின் ஆதார பீடத்தில் சார்த்தல், ராஜகோபுர கலசங்கள் பொருத்தும் பணி நேற்று சிறப்பாக நடைபெற்றது.



சென்னை வடபழநி ஆண்டவர் கோவிலில், 2007ல் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. 14 ஆண்டுகளுக்குப் பின், நாளை கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது.108 ஹோம குண்டங்கள் கும்பாபிஷேகத்திற்கான ஆயத்த பூஜைகள், 17ம் தேதி முதல் நடந்து வரும் நிலையில், யாகசாலை பிரவேசம் நேற்று முன்தினம் நடந்தது.

யாகசாலையில் முருகப் பெருமானுக்கு 33 ஹோம குண்டங்கள், பரிவார தெய்வங்களுக்கு 75 ஹோம குண்டங்கள் என 108 ஹோம குண்டங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதில், 1,300 கலசங்கள் வைக்கப்பட்டுள்ளன. யாகசாலை பூஜைகளை, பிள்ளையார்பட்டி சர்வசாதகம் பிச்சை குருக்கள் தலைமையிலான சிவாச்சாரியார்கள் நிகழ்த்தி வருகின்றனர்.


கோவில்களில், 12 ஆண்டுகளுக்கு பின் கும்பாபிஷேகம் நடக்கும்போது, சன்னிதிகளில் பீடத்தின் கீழ் யந்திரம் வைத்து, மூலவர் பிரதிஷ்டை நடக்கிறது. அதை பாதுகாப்பதற்காக அஷ்டபந்தன மருந்து சார்த்தப்படுகிறது.

இந்நிலையில், நேற்று காலை அஷ்டபந்தன மருந்து இடிக்கும் வைபவம், பிள்ளையார்பட்டி சர்வசாதகம் பிச்சை குருக்கள், மதுரை, திருப்பரங்குன்றம், ஸ்ரீஸ்கந்தகுரு முதல்வர் சிவஸ்ரீ ராஜா பட்டர் ஆகியோர் தலைமையில் நடந்தது.

சுக்கான் துாள் எனும் பச்சை சுண்ணாம்புக்கல்,கற்காவி, கருங்குங்கிலியம், கொம்பரக்கு, உலாந்தா லிங்கம் எனும் ஜாதிலிங்கம், செம்பஞ்சு, தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகிய எட்டு பொருட்கள் சேர்த்து இடித்து, அஷ்டபந்தன கலவை மருந்து தயாரித்து சன்னதிகளின் பீடத்தில் சார்த்தப்பட்டது. பின், யாகசாலை பூஜைகளில் பங்கேற்று வரும் சிவாச்சாரியார்கள் அனைவருக்கும், கோவில் தக்கார் எல்.ஆதிமூலம் வஸ்திரங்களை வழங்கி மரியாதை செய்தார்.


ஏழு தங்கக் கலசங்கள்


நேற்று பகல் 12:00 மணிக்கு மகா பூர்ணாஹுதி, தீபாராதனையும், மாலை 5:30 மணிக்கு விசேஷ சந்தி, மூன்றாம் கால யாக பூஜை, ஜபம் ஹோமமும் நடந்தன.அதைத் தொடர்ந்து, தங்க முலாம் பூசப்பட்ட ஏழு தங்கக் கலசங்கள் ராஜகோபுரத்தில் பொருத்தப்பட்டன. இரவு 8:30 மணிக்கு மகா பூர்ணாஹுதி நடந்தது.

இந்நிகழ்ச்சிகளில் வடபழநி ஆண்டவர் கோவில் இணை கமிஷனர் ரேணுகா தேவி, 'கிருஷ்ணா ஸ்வீட்ஸ்' முரளி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்நிலையில் நேற்றிரவு நடந்த யாகசாலை பூஜையில் அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு பங்கேற்றார்.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X