கோவில் நிலங்களில் ஆக்கிரமிப்பு; மூன்று மாதங்களில் அகற்ற உத்தரவு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஜன
2022
09:06
பதிவு செய்த நாள்
ஜன 22,2022 09:05


சென்னை: திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள ஆளவந்தார் கோவிலுக்கு சொந்தமான நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை ஏப்ரலுக்குள் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்ய, அறநிலையத்துறைக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



திருப்போரூர் கந்தசுவாமி கோவில் மற்றும் மாமல்லபுரம் ஆளவந்தார் கோவிலுக்கு சொந்தமாக, 2,000 ஏக்கர் நிலம் உள்ளதாகவும், இவற்றில் சில ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும், இந்த சொத்துக்களை அளவீடு செய்து பாதுகாக்கவும் கோரி, வழக்கறிஞர் ஜெகநாத், உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், இக்கோவில்களுக்கு சொந்தமான நிலங்களை, பத்திரப்பதிவு செய்ய தடை விதித்தது. மேலும், நிலங்களை அளவீடு செய்யவும் உத்தர விட்டிருந்தது.

இவ்வழக்கு, பொறுப்பு தலைமை நீதிபதி எம்.என்.பண்டாரி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அரசு பிளீடர் முத்துகுமார் ஆஜராகி, நிலங்கள் அளவீடு செய்யப்பட்டு, அறிக்கை தாக்கல் செய்யப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.


ஹிந்து சமய அறநிலையத்துறை சார்பில், சிறப்பு பிளீடர் சந்திரசேகரன் ஆஜராகி, ''கோவில் நிலங்களை பத்திரப்பதிவு செய்ய முடியாது. ஆக்கிரமிப்பை அகற்ற, அறநிலையத்துறை சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,'' என்றார்.

இதையடுத்து, கோவில் நிலங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை, ஏப்ரல் மாதத்துக்குள் அகற்றி, அறிக்கை தாக்கல் செய்யும்படி, அறநிலையத்துறைக்கு முதல் பெஞ்ச் உத்தரவிட்டது.

 

Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
22-ஜன-202214:53:12 IST Report Abuse
M S RAGHUNATHAN அப்படி ஆக்ரமிப்புகளை அகற்ற வில்லை என்றால் அந்த கோயிலில் நிர்வாக அதிகாரிகளாக இருந்த அனைவரையும் மற்றும் அறநிலையத்துறை இணை மற்றும் துணை ஆணையர்களை கைது செய்வோம் என்று உயர் நீதி மன்றம் சொன்னால் ஒரு சமயம் நடக்கலாம். ஆனால் நீதி மன்றம் கண்டனம் மட்டும் தெரிவித்து பேசாமல் அடுத்த வழக்கை விசாரிக்க சென்றுவிடும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X