ஆளுங்கட்சி கூட்டம்னா 'கொர்னா' பரவாதாம்: சொல்லிக்காட்டிய கோவை ஜல்லிக்கட்டு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

22 ஜன
2022
10:15
பதிவு செய்த நாள்
ஜன 22,2022 09:49

கோவை: கோவையில் நேற்று நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில், பரிசு மழை பொழிந்தது. வீரர்களும், காளைகளின் உரிமையாளர்களும் கார், பைக், தங்க நாணயம், சைக்கிள், 'டிவி' என ஏராளமான பரிசுகளை அள்ளிச் சென்றனர்.
கோவை, செட்டிபாளையம் எல் அண்ட் டி பைபாஸ் சாலை மைதானத்தில் நேற்று ஜல்லிக்கட்டு நடந்தது. காளையை அடக்கி வெற்றி பெறும் வீரர்களுக்கு தங்க நாணயம், கட்டில், சைக்கிள், பீரோ, 'டிவி', அண்டா, ஹாட்பாக்ஸ் ஆகியவை உடனுக்குடன் பரிசாக வழங்கப்பட்டன. வெற்றி பெற்ற காளைகளின் உரிமையாளர்களுக்கும் அதேபோல், பரிசுகள் வழங்கப்பட்டன.

போட்டி முடிவில் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ''போட்டிக்கு, 1,250 காளைகள் வந்திருந்தன. ஆனால், குறித்த நேரத்தில் 873 காளைகள் மட்டுமே போட்டியில் களம் இறங்க முடிந்தது. தமிழகத்தின் வெவ்வேறு பகுதிகளை சேர்ந்த 400 வீரர்கள் களம் இறங்கினர். இதில் 21 காளைகளை அடக்கி சாதனை படைத்த வீரர் குருவித்துறை மணிக்கு, முதல்வர் ஸ்டாலின் சார்பில் ஆல்டோ கார் பரிசாக வழங்கப்படுகிறது,'' என்று அறிவித்தார்.
இரண்டாம் பரிசாக, 19 காளைகளை அடக்கிய மதுரையை சேர்ந்த பிரபா என்பவருக்கு புல்லட் வழங்கப்பட்டது. மூன்றாவது பரிசை 18 காளைகளை அடுக்கிய திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை சேர்ந்த கார்த்திக் பெற்றார்.
பரிசளிப்பு விழாவில் கலெக்டர் சமீரன் மற்றும் அரசு அதிகாரிகள், ஜல்லிக்கட்டு பேரவை நிர்வாகிகள், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.போட்டியை பார்வையிட பொதுமக்கள் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. எனினும், ஆளும் கட்சியினர், வி.ஐ.பி.,க்களின் கூட்டமே பெரும் கூட்டமாக இருந்தது.


சிறந்த காளைகள்

கோவை ஜல்லிக்கட்டு போட்டியின் சிறந்த காளையாக, கட்டிக்குடிபட்டி சுப்பிரமணியன் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது. இரண்டாம் இடத்துக்கு சிவகங்கையை சேர்ந்த ராஜேஷ் என்பவரின் காளை, மூன்றாம் இடத்துக்கு சேலம் சீலையம்பட்டி செந்தில் என்பவரின் காளை தேர்வு செய்யப்பட்டது.


102 வீரர்கள் காயம்


முதல் காளையாக, சரவணம்பட்டி பெருமாள் கோவில் காளை வாடிவாசல் கடந்து வந்தது. இதை தொடர்ந்து மற்ற காளைகள் அவிழ்த்து விடப்பட்டன. லோகேஸ்வரி என்பவரின் 2 காளைகளை யாராலும் அடக்க முடியவில்லை.
அந்தப்பெண்ணுக்கு 2 தங்க நாணயங்கள் பரிசாக கிடைத்தன. காரமடையை சேர்ந்த கீர்த்திகாவின் காளைக்கும் தங்க நாணயம் பரிசாக கிடைத்தது; போட்டியில் ௧0௨ வீரர்கள் லேசான காயம் அடைந்தனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (11)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
22-ஜன-202219:27:29 IST Report Abuse
D.Ambujavalli இவர்களில் பலர் முகக்கவசம் அணியாமலும் , ஒருவர் மேலே ஒருவர் நின்றுகொண்டும் எவ்வளவு அழகாக கோரானவைத் தடுக்கிறார்கள் பாமரன் முகக்கவசம் அணியாவிட்டால் ஐந்நூறு ரூபாய் அபராதம் முதல்வர் / சுகாதார அமைச்சர் கண்களுக்கு இதெல்லாம் படாது 'கவலை அளிக்கிறது, பாதுகாப்புடன் இருங்கள்' பாட்டும் பல்லவியும் இங்கெல்லாம் எட்டிக்கூடப் பார்க்காது வாழ்க விடியல் அரசு
Rate this:
Cancel
Duruvesan - Dharmapuri,இந்தியா
22-ஜன-202217:28:07 IST Report Abuse
Duruvesan கர்த்தரின் சீடர் விடியல் வாழ்க
Rate this:
Cancel
Murugesan - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
22-ஜன-202212:30:53 IST Report Abuse
Murugesan .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X