கோவை: ஒமைக்ரான் தொற்று அதிகரிப்பை தொடர்ந்து, கோவை வந்து செல்லும் விமானங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது.
கோவை விமான நிலையத்திலிருந்து பிற நகரங்களுக்கும், வெளிநாடுகளுக்கும் செல்லும் விமான போக்குவரத்தின் எண்ணிக்கை அதிகபட்சமாக கடந்த டிசம்பர் 21 ல், 23 வரை உயர்ந்தது.
டில்லி, மும்பை, பெங்களூரு, சென்னை ஆகிய நகரங்களுக்கு, இண்டிகோ, கோஏர், ஸ்பைஸ் ஜெட் உள்ளிட்ட விமான நிறுவனங்கள் இயக்கப்பட்டு வந்தன. தற்போது இவற்றின் எண்ணிக்கை, மூன்றில் ஒரு பங்கு குறைக்கப்பட்டுள்ளது.
நேற்றைய நிலவரப்படி 15 விமானங்கள் கோவை வந்து சென்றன. அதிலும் இரண்டு விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன.ஷார்ஜா செல்லும் ஏர் அரேபியா விமானம் மட்டும் இயங்கி வருகிறது. சிங்கப்பூர் செல்ல ஸ்கூட் விமானம் இயங்கி வருகிறது. பிற நாடுகளுக்கான சேவை இல்லை.
இந்த விமானத்தில் பயணிகள் அதிக அளவில் பயணிப்பதால், காய்கறி ஏற்றுமதி குறைந்துள்ளது. வெளிநாட்டு பயணிகள் வசதிக்காக, புதிய இமிக்ரேஷன் பரிசோதனை கவுன்ட்டர் துவக்கப்பட்டுள்ளது.