ஊட்டி: நீலகிரி மாவட்டத்தில், கோர்ட் ஊழியர்கள் 42 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டம், ஊட்டி செஷன்ஸ் கோர்ட் வளாகத்தில், மகிளா கோர்ட், சார்பு நீதிமன்றம், தொழிலாளர் நீதி மன்றம், நிரந்தர மக்கள் நீதிமன்றம் ஆகியவை உள்ளன. இங்கு, ஒரு நீதிபதி உட்பட, 40 ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.தொடர்பில் இருந்த, 200க்கும் மேற்பட்டவர்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து, அங்குள்ள அனைத்து கோர்ட்களும், தற்காலிகமாக மூடப்பட்டன. நகராட்சி ஊழியர்கள் கோர்ட் வளாகத்தை கிருமிநாசினி தெளித்து துாய்மைப்படுத்தினர்.
கோத்தகிரி தாலுகா நீதிமன்றத்தில் ஒரு நீதிபதி, குன்னுார் கோர்ட் ஊழியர்கள் இருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.அமைச்சருக்கு தொற்றுவனத்துறை அமைச்சர் ராமச்சந்திரனுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து, கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில், தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அரசு நிகழ்ச்சிகளை தவிர்த்து, வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டார். அவருடன் நிகழ்ச்சிகளுக்கு சென்றவர்களுக்கு, பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.