பின்னலாடை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி திருப்பூரில் பா.ஜ., உண்ணாவிரதம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
15:44

திருப்பூர்: பின்னலாடை தொழிலை பாதுகாக்க வலியுறுத்தி, திருப்பூரில் நேற்று, பா.ஜ., சார்பில் நடந்த உண்ணாவிரதத்தில் ஏராளமானோர் திரண்டனர்.



பின்னலாடை தொழிலை பாதுகாக்க நுால், பருத்தி, மின்சாரம் போன்றவற்றுக்கு தமிழக அரசு மானியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி, திருப்பூர் வடக்கு மாவட்ட பா.ஜ., சார்பில், உண்ணாவிரத போராட்டம் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் செந்தில்வேல் தலைமை வகித்தார்.

பா.ஜ., விவசாய அணி மாநில தலைவர் நாகராஜ் கூறியதாவது: ஜவுளி தொழில் மீது தமிழக அரசு கவனம் செலுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் உண்ணாவிரதம் நடக்கிறது. நுாலுக்கு கிலோவுக்கு, 50 ரூபாய் மானியம் வழங்க வேண்டும். மின் கட்டணத்துக்கு மானியம் தரப்பட வேண்டும். தமிழக விவசாயம், தொழிலுக்கு பாதுகாப்பு தரும் வகையில் தி.மு.க., அரசு எதுவும் செய்யவில்லை. பொங்கல் தொகுப்பில் பெரிய ஊழல் நடந்துள்ளது. பஞ்சாலை தொழிலை பாதுகாக்க வேண்டியது தமிழக அரசின் கடமை. பல்வேறு வகையில் தொடர்ச்சியாக தமிழகத்தின் வளர்ச்சிக்காக தேவையான நிதியை மத்திய அரசு வழங்கி வருகிறது. பக்கத்து மாநிலங்களில் பருத்திக்கு மானியம் வழங்கப்படுகிறது. தமிழகத்திலும் அதேபோல் வழங்கப்பட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

மாநில செயலாளர் மலர்கொடி, நெசவாளர் பிரிவு மாநில தலைவர் பாலமுருகன், மாநில இளைஞரணி துணை தலைவர் சிவசங்கரி, தொழிற்பிரிவு மாநில செயலாளர்கள் ரவி, ராஜமாணிக்கம், மாவட்ட பொது செயலாளர்கள் சீனிவாசன், கதிர்வேல், தங்கராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X