மேட்டூர்: நெடுஞ்சாலையில் உள்ள, 55 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, விளக்கம் கேட்டு, 'நோட்டீஸ்' கொடுக்கப்பட்டுள்ளது. மேட்டூர், ஒர்க்?ஷாப் கார்னர் முதல் புனித மரியன்னை பள்ளி வரை, நகராட்சி சாலையோரம் தாலுகா அலுவலகம், பஸ் ஸ்டாண்ட், கடைவீதி, உழவர் சந்தை, நீதிமன்றம் உள்ளன. 100 அடி அகலம் கொண்ட இச்சாலை, தற்போது, 50 அடியாக குறுகிவிட்டது. இதற்கு, சாலை இருபுறமும், 150க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளதே காரணம். இதனால், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற, ஒருவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில், ஆக்கிரமிப்புகளை அகற்ற, நகராட்சிக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, மேட்டூர் நகராட்சி சார்பில், மூன்று நாளாக, மேற்கு நெடுஞ்சாலையோரம் உள்ள, 55 ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுவது தொடர்பாக விளக்கம் கேட்டு உரிமையாளர்களுக்கு, 'நோட்டீஸ்' வழங்கப்பட்டது.