சேலம்: கன்னங்குறிச்சி, சின்னதிருப்பதியை சேர்ந்தவர் செல்வராஜ், 39. கோரிமேடு, பச்சியம்மன் தியேட்டர் அருகே, நேற்று முன்தினம் காலை, டாஸ்மாக் மது பாட்டில்களை விற்றார். அவரை, மதுவிலக்கு போலீசார் கைது செய்து, 26 பாட்டில்களை பறிமுதல் செய்தனர். அதேபோல், வெள்ளாளப்பட்டியை சேர்ந்த சேட்டு, 55, என்பவர், நேற்று முன்தினம் மாலை, லட்சுமி நகர் பாலம் மீது, மது விற்றதால், கருப்பூர் போலீசார் கைது செயது, ஐந்து பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.