மேட்டூர்: வட்டிக்கு கொடுத்த பணத்தை கேட்டு, சூப்பர் மார்க்கெட்டை, நான்கு பேர் மூடினர். மேட்டூர், ஆஸ்பத்திரி காலனியை சேர்ந்தவர் பிரதீப், 36. இவர் ராமன் நகரில் சூப்பர் மார்க்கெட் நடத்துகிறார். சில ஆண்டுக்கு முன், தங்கமாபுரிபட்டணத்தை சேர்ந்த தினேஷ்குமாரிடம், பல லட்சம் ரூபாய், வட்டிக்கு வாங்கியுள்ளார். அதற்கு ஈடாக கையெழுத்திட்ட, நிரப்பப்படாத, 5 காசோலைகளை பிரதீப் கொடுத்துள்ளார். பணத்தை செலுத்த தாமதமானதால், சமீபத்தில் பிரதீப், கார், பைக்கை, தினேஷ்குமாரின் தந்தை சுதாகரிடம் கொடுத்துள்ளார். இந்நிலையில், நேற்று காலை சுதாகர், அவரது ஆதரவாளர் மூன்று பேர், சூப்பர் மார்க்கெட்டுக்கு வந்து, பணத்தை கேட்டு பிரதீப்பை மிரட்டினர். மேலும், வாடிக்கையாளர்களை வெளியேற்றி கடையை பூட்டிச்சென்றதாக, பிரதீப் புகார்படி கருமலைக்கூடல் போலீசார், சுதாகர் உள்பட நான்கு பேரை தேடுகின்றனர்.