ஏரியூரில் கிரானைட் சுரங்கம் அமைக்க மக்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 ஜன
2022
20:18

ஏரியூர்: ஏரியூர் பகுதியில், தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில், கிரானைட் சுரங்கம் அமைப்பதற்கான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. ஏரியூர் அருகில், 36 ஹெக்டேர் பரப்பளவில் கருப்பு கல் கிரானைட் சுரங்கம் செயல்பட்டு வந்தது. கடந்த, 2016ல், கிரானைட் வெட்டும் பணியால், சுற்றுச்சூழல் மாசு அடைவதாகவும், மக்கள் சுவாசிக்க சிரமப்படுவதாகவும் கூறி, இப்பகுதி பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சுரங்கப்பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று தமிழ்நாடு கனிம நிறுவனம் சார்பில், ஏரியூர் பகுதியில் கருப்பு கல் கிரானைட் சுரங்கம் அமைக்க, சுற்றுச்சூழல் அனுமதி பெறுவதற்கான, பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா தலைமையில், சுற்றுச்சூழல் பொறியாளர் ராஜ்குமார், பென்னாகரம் தாசில்தார் அசோக்குமார், ஏரியூர் ஒன்றிய குழு தலைவர் பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். டாமின் தலைமை அலுவலக துணை மேலாளர் கணேசன், கிரானைட் குவாரி செயல்பாடு குறித்து விளக்கினார். மேலும், கிரானைட் சுரங்க பணியால், இனி காற்று மாசு ஏற்படாது, அதிக சத்தம் எழுப்பும் வெடிகளை பயன்படுத்த மாட்டோம் என உறுதியளித்தனர். அரசு கனிம நிறுவனம் சார்பில் ஏரியூர் அரசு தொடக்கப் பள்ளிக்கு, இரண்டு கணினிகள், இரண்டு சோலார் விளக்குகள் இலவசமாக வழங்கப்படும் என தெரிவித்தார். கூட்டத்தில் ஏரியூர் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் கருத்துகளை பதிவு செய்தனர்.

 

Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X