மொரப்பூர்: மொரப்பூர் அடுத்த பசுவாபுரம் பஞ்., அம்பாலப்பட்டியில், 12 ஆண்டுகளுக்கு முன்பு, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டது. இதனை முறையாக, பராமரிக்க பஞ்., நிர்வாகம் ஆர்வம் காட்டாததால், தற்போது பயன்பாடின்றி உள்ளது. இதனால் பெண்கள், குழந்தைகள் திறந்தவெளியில் மலம் கழிக்கும் நிலையுள்ளது. எனவே, சுகாதார வளாகத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.