மொரப்பூர்: மொரப்பூர், அண்ணல் நகரை சேர்ந்தவர் பெருமி, 60. இவரது இளைய மகன் மகேந்திரன் மின்வாரிய அலுவலகத்தில் பணிபுரிந்து வந்த நிலையில், கொரோனா தொற்றால் கடந்தாண்டு மே 14ல், உயிரிழந்தார். மகேந்திரனின் இறப்பை அடுத்து, எல்.ஐ.சி., பாலிசி பணம் அவரது தாய் பெருமிக்கு மொரப்பூர் இந்தியன் வங்கி கிளையில் உள்ள அவரது வங்கி கணக்கிற்கு வந்துள்ளது. இந்நிலையில், வீடு கட்ட வாங்கிய கடனை கொடுக்க வேண்டும் எனக்கூறி, மகேந்திரன் மனைவி அருணாவின் தம்பி சக்திவேல், 27, பெருமியை இந்தியன் வங்கிற்கு கடந்தாண்டு செப்., 7ல், அழைத்து சென்று காசோலையில் கையெழுத்து வாங்கி, ஐந்து லட்சம் ரூபாய் எடுத்துள்ளார். அதன்பின், போலியாக கையெழுத்திட்டு, மூன்று லட்சம் ரூபாய் வங்கியில் இருந்து பணம் எடுத்துள்ளார். பெருமி புகார்படி, மொரப்பூர் போலீசார் சக்திவேல் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.