ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், கெலமங்கலம் ஸ்டேஷன் எஸ்.ஐ., பார்த்திபன் மற்றும் போலீசார், தங்களது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது, மதுபானத்தை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்ததாக, கெலமங்கலம் அண்ணா நகரை சேர்ந்த ரமேஷ், 43, நேதாஜி நகரை சேர்ந்த தர்மன், 45, முகலூரை சேர்ந்த திம்மையப்பா, 47, யுபுரத்தை சேர்ந்த நாகராஜ், 45, ஆகிய நான்கு பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 70 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.