கிருஷ்ணகிரி: தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு, அம்மணி மல்லாபுரத்தை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன், 29. இவர் கடந்த, 17ல், நண்பர்களுடன் காவேரிப்பட்டணம் அருகே குட்டிகவுண்டனூர் பகுதியில் நடந்த எருது விடும் விழாவிற்கு வந்துள்ளார். அப்போது, குட்டிகவுண்டனூரை சேர்ந்த விஜய், 22, சசிக்குமார், 22, கோவிந்தராஜ், 24, பாலாஜி, 20 ஆகியோர் சேர்ந்து முத்து கிருஷ்ணன், நண்பர்களான பார்த்திபன், 21, மகிபாலா, 20, தென்னரசு, 21, ஆகியோரை தாக்கியுள்ளனர். இது குறித்து முத்துகிருஷ்ணன் அளித்த புகார்படி காவேரிப்பட்டணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சசிக்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். மற்ற இருவரை தேடி வருகின்றனர்.