கிருஷ்ணகிரி: பர்கூர் அடுத்த ஜிட்டோபனப்பள்ளியை சேர்ந்தவர் ஜெயசீலன், 31; இவரது மனைவி பிரீத்தி, 21. இவர்களுக்கு திருமணமாகி, 20 மாதங்களாகிறது. குடும்ப பிரச்னையில் பிரீத்தியை அவரது கணவர் ஜெயசீலன், அவரது தாய் மாதம்மாள், 50, தந்தை கேசவன், 64, அக்கா வெண்ணிலா, 35 ஆகியோர் சேர்ந்து தாக்கியுள்ளனர். இது குறித்து, பர்கூர் போலீசில் பிரீத்தி புகார் செய்தார். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜெயசீலன், அவரது தாய் மாதம்மாள், தந்தை கேசவன், சகோதரி வெண்ணிலா ஆகிய நான்கு பேரை கைது செய்தனர்.