தேவகோட்டை: நகர்ப்புற தேர்தலில் கால அவகாசம் இருக்காது,தேர்தல் பணியை விரைவாக செய்ய வேண்டுமென அ.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் கூறினார்.தேவகோட்டையில் நகர்மன்ற தேர்தலில் அ.தி.மு.க., சார்பில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் மாவட்ட செயலாளர் செந்தில்நாதன்எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது. நகர செயலாளர் ராமச்சந்திரன் வரவேற்றார். முன்னாள்நகராட்சி துணை தலைவர் மாவட்ட மாணவர்அணி செயலாளர் சுந்தரலிங்கம், பேரவை நிர்வாகி தனசேகரன் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் செந்தில்நாதன் பேசுகையில், தேர்தலுக்கு கால அவகாசம் போதியளவு இல்லாமல் விரைவாக நடத்த வாய்ப்பு உள்ளது. எனவே தேர்தல் பணியை விரைவாக செய்யுங்கள், என்றார்.