மானாமதுரை:மானாமதுரையில் அரசு ஐ.டி.ஐ., அமைக்க அரசு அரசாணை வெளியிட்டதை தொடர்ந்து மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி மானாமதுரையில் ஐ.டி.ஐ.,க்கு இடத்தை தேர்வு செய்யும் வகையில் செய்களத்தூர் ஊராட்சியில் அரசுக்கு சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை பார்வையிட்டார். சுற்றுவட்டார பகுதியில் இருந்து மாணவர்கள் ஐ.டி.ஐ.,க்கு வந்து செல்ல சாலை வசதி மற்றும் பஸ் வசதி குறித்தும் ஆய்வு செய்தார்.