சிவகங்கை:தொழில் நிறுவனங்கள்உற்பத்தி பொருட்களுக்கு காப்புரிமை, வணிக முத்திரை குறியீடு, புவிசார் குறியீடு பெற செலுத்தும் கட்டணத்திற்கு அரசு மானியம் வழங்குகிறது.சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களுக்கு உள்நாட்டிலோ, வெளிநாட்டிலோ காப்புரிமை பெற செலுத்தும்கட்டணத்தில் 75 சதவிகிதம் அதிகபட்சம் ரூ.3 லட்சம் வரையும், வணிக முத்திரை குறியீடு, புவிதார் குறியீடு பெற 50 சதவிகிதம் அதிகபட்சம்ரூ.25 ஆயிரம் வரை மானியம் வழங்கப்படுகிறது.உற்பத்தி நிறுவனங்கள்பதிவு சான்றிதழ் பெற்ற 6 மாதத்திற்குள் www.msmeonline.tn.gov.in/incentives என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். பதிவு சான்று நகல், காப்புரிமை, வணிக முத்திரை, புவிசார் குறியீடு பெற்ற சான்று நகல், செலவினம் செய்த பணப்பற்று சீட்டு, சான்று கொடுத்த நிறுவனத்தின் செலவின கேட்பு ஆணை, நிறுவனத்தின் சான்று ஆகியவற்றை சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தில் அளிக்க வேண்டும்.மேலும் விபரங்களுக்கு 89255 33989, 89255 33990, 89255 33991.