மானாமதுரை; மானாமதுரையில் நீர்நிலைகளை ஆக்கிரமித்து ரோடு அமைக்கப்பட்டதை வருவாய்த்துறையினர் அகற்றினர்.மானாமதுரை தாலுகா அலுவலகம் எதிரே உள்ள காட்டு உடைகுளம் கண்மாயை ஆக்கிரமித்து அருகிலுள்ள குடியிருப்புகளுக்கு ரோடு அமைத்துஉள்ளதாக புகார் வந்தது.தாசில்தார் தமிழரசன்தலைமையில் அப்பகுதியில் சர்வே செய்து ஆக்கிரமித்து போடப்பட்டிருந்த ரோட்டை மணல் அள்ளும் இயந்திரம் மூலம் அகற்றினர். மானாமதுரை சிப்காட் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.