காரைக்குடி,:மாவட்ட உணவு பாதுகாப்பு அலுவலர் பிரபாவதி காரைக்குடி தெற்குத்தெரு மேல ஊரணி சந்து பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். வெற்றிவேல் மகன் கார்த்திக் 30, என்பவரது கோடவுனில் சோதனை செய்தபோது தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.காரைக்குடி போலீசார்,61 ஆயிரம் மதிப்புஉள்ள 47 கிலோ புகையிலை பொருட்களை பறிமுதல் செய்ததோடு, புகையிலையை பதுக்கி வைத்திருந்த கார்த்தியை கைது செய்தனர்.