கொடைக்கானல்: வார விடுமுறை தினமான நேற்று கொடைக்கானலில் பயணிகள் வருகை இன்றி நகரே வெறிச்சோடியது.கடந்த வாரம் பொங்கல் விடுமுறை மற்றும் பள்ளிகளுக்கு விடுமுறை என்ற நிலையில், கொடைக்கானல் நகரில் பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதற்கு மாறாக நேற்று பயணிகள் வருகையின்றி ஏரிச்சாலை, தோட்டக்கலைத்துறை பூங்காக்கள், வனச் சுற்றுலா தளம், வெள்ளி நீர்வீழ்ச்சி, கோக்கர்ஸ் வாக் போன்ற இடங்களில் சொற்ப அளவிலான பயணிகளையே காண முடிந்தது. இன்று ஊரடங்கு என்பதால் வெளியூர் பயணிகள் வருகை கொஞ்சமும் இல்லை. பகலில் சுட்டெரிக்கும் வெயில் நீடித்த நிலையில், மதியத்திற்கு பின் கடும் குளிர் நிலவியது. பயணிகள் வருகை இல்லாததால் எப்போதும் சுறுசுறுப்பாக காணப்படும் கொடைக்கானல் களையிழந்தது. வியாபாரமும் படு மந்தமாக இருந்தது.